தமிழ்நாடு

நகை வியாபாரியை தாக்கி நகைகள் கொள்ளை.. 48 மணி நேரத்தில் திருட்டு கும்பலை தட்டி தூக்கிய நெல்லை போலிஸ்!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நகைக்கடை வியாபாரியை அரிவாளால் தாக்கி தங்கம் கொள்ளையடிக்கபட்ட வழக்கில், 48 மணி நேரத்தில் 5 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நகை வியாபாரியை தாக்கி நகைகள் கொள்ளை.. 48 மணி நேரத்தில் திருட்டு கும்பலை தட்டி தூக்கிய நெல்லை போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் பிச்சை. இவர் கடந்த 11ம் தேதி இரவு பஜாரில் தனது நகை கடையை முடித்துவிட்டு வீட்டுக்கு நகையுடன் சென்றுள்ளார். அப்போது வியாபாரி மைதீன் பிச்சையை பைக்கில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி அவர் கையிலிருந்த தங்க நகையை பறித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தென் சரக டி.ஐ.ஜி பர்வேஷ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் சம்பவத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனைதொடர்ந்து ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இதன்படி இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை 48 மணி நேரத்திற்குள் காவல்துறை தனிப்படையினர் கைது செய்தனர்.

நகைக்கடை வியாபாரியை அரிவாளால் தாக்கி நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் சுதாகர், ஐயப்பன், மருதுபாண்டி மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 3 கிலோ 10கிராம் எடையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடைய இருவரை தேடி வருகிறோம் என நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார். முன்னதாக பறிமுதல் செய்த நகைகளை பார்வையிட்டார். விரைவில் வழக்கு தொடர்பாக மேலும் இருவரை கைது செய்வோம் என்றும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories