தமிழ்நாடு

TNPSC Group 4 தேர்வு எப்போது? காலி பணியிடங்கள் எத்தனை? - அறிவிப்பை வெளியிட்ட பாலச்சந்திரன்!

TNPSC குரூப் 4 தேர்வுக்கான தேதி மற்றும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அறிவிப்பை TNPSC தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார்.

TNPSC Group 4 தேர்வு எப்போது? காலி பணியிடங்கள் எத்தனை? - அறிவிப்பை வெளியிட்ட பாலச்சந்திரன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

TNPSC குரூப் 4 தேர்வுக்கான தேதி மற்றும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார்.

7,382 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டாவின் மூலம் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்க்கைக்கு தேர்வுகளை நடத்துகிறது. அந்தவகையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று குரூப் 4 தேர்வுக்கான தேதி மற்றும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

TNPSC குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

7,382 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டாவின் மூலம் நிரப்பப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை TNPSC இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும். தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories