தமிழ்நாடு

"TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா? கவனம்..!" : நடைமுறையில் புதிய மாற்றங்களை கொண்டுவந்த TNPSC!

தேர்வு முடிவுகளை துரிதப்படுத்தும் வகையில் TNPSC விண்ணப்ப நடைமுறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

"TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா? கவனம்..!" : நடைமுறையில் புதிய மாற்றங்களை கொண்டுவந்த TNPSC!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குரூப்-1, 2, 4 பணியிடங்கள் நீங்கலாக மற்ற அனைத்து நேரடி நியமனங்களுக்குமான இணையவழி விண்ணப்பத்தில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது TNPSC.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றும் நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் குரூப் 1, குரூப் 2, மற்றும் குரூப் 4 பதவிகள் தவிர, பிற அனைத்து நேரடி நியமனங்களுக்கும் விண்ணப்பிக்கும்போது புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளதாக தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கும்போது, அப்பணிக்கு தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்ட பிற ஆவணங்களையும் இணைய விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யவேண்டும்.

எனவே, விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் தங்களது சான்றிதழ்களை முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதார் இ-சேவை மையங்கள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. தேவையான சான்றிதழ்கள், ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

எழுத்துத் தேர்விற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது, முற்றிலும் விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்களின் அடிப்படையிலேயே அமையும்.

எனவே சான்றிதழ் பதிவேற்றம் செய்வதில் அக்கறையுடனும், எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு helpdesk@tnpscexams.in, grievance.tnpsc@tn.gov.in என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை துரிதப்படுத்தும் வகையில் நடைமுறையில் இந்த புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories