தமிழ்நாடு

“தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயன்தருவதாக அமைந்துள்ளது”: ரகுராம் ராஜன் பாராட்டு!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மாணவிகள் மற்றும் சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு பலன் தரும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.

“தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயன்தருவதாக அமைந்துள்ளது”:  ரகுராம் ராஜன் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மாணவிகள் மற்றும் சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு பலன் தரும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான ரகுராம் ராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.

மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப்டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் ரகுராம் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்திய பொருளாதாரவளர்ச்சி குறித்து உரையாற்றிய அவர், கல்லூரி மாணவர்களின் பொருளாதாரம் தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது, தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை வெகுவாக வரவேற்ற ரகுராம் ராஜன், அரசுப் பள்ளிமாணவிகளின் உயர் கல்விக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை மிகச்சிறப்பான திட்டம் என பாராட்டினார்.

banner

Related Stories

Related Stories