திருமணத்தன்று பெரும்பாலும் காரிலோ, மாட்டு வண்டியிலோ மணமக்கள் செல்வது வழக்கம். ஆனால், புதிதாக திருமணமான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவையே திருமணத்துக்கான வாகனமாக மாற்றி மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் கிராமத்தில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் மனு. தன் ஆட்டோவை பெரிதும் நேசிக்கும் இவருக்கு தனது கிராமத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கோவிலில்தான் திருமணம் நடந்திருக்கிறது.
கடலூரை சேர்ந்த விஜய் சங்கரி என்ற பெண்ணுடன் ஆட்டோ ஓட்டுநரான மனுவுக்கு திருமணம் முடிந்த நிலையில் தனது மனைவியை ஆட்டோவில் அழைத்துச் செல்வதற்காக ஆட்டோவை அலங்கரித்த ஆட்டோ ஓட்டுநர் மனு, திருமணம் முடிந்த கோவிலில் இருந்து தனது வீட்டுக்கு ஆட்டோவில் தனது இருக்கையில் அருகில் தனது மனைவியை அமர வைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.