தமிழ்நாடு

“500 நிறுவனங்கள்.. ஒரே நாளில் பணி நியமன ஆணை பெற்ற 8,752 பேர்” : இளைஞர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் கழக அரசு!

செங்கல்பட்டில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 8,752 பேர் முன்னணி நிறுவனங்களில் பணிநியமன ஆணை பெற்றுள்ளனர்.

“500 நிறுவனங்கள்.. ஒரே நாளில் பணி நியமன ஆணை பெற்ற 8,752 பேர்” : இளைஞர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் கழக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் நடைபெற்றது. இந்த முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் பிற மாவட்ட இளைஞர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றனர்.

இந்த முகாமில் 38,404 ஆண்களும், 34,056 பெண்களும் என மொத்தம் 72,460 பேர் பங்கேற்றனர். இதில் 8,752 முன்னணி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணிநியமன ஆணைகளும் இந்த முகாமிலேயே வழங்கப்பட்டது.

அதேபோல், இம்முகாமில் 81 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இவர்களில் 31 பேர் பணிநியமனம் பெற்றுள்ளனர். மேலும் அடுத்து பணிநியமனம் பெறுவதற்கு தகுதிபடைந்தவர்கள் என்ற அடிப்படையில் 2,983 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முகாமில் பணிநியமனம் பெற்ற இளைஞர்கள் தமிழ்நாடு அரசை வெகுவாக பாராட்டினர். இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

மே 2021 முதல் இதுவரை 36 பெரிய அளவிலான தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், 297 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதில் 5,708 நிறுவனங்களும், 2,50,516 வேலை நாடுநர்களும் பங்கேற்றதில் 41,213 வேலை நாடுநர்கள் பல்வேறு துறைகளில் பணிநியமனம் பெற்றுள்ளனர். இதில் 517 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர்.

banner

Related Stories

Related Stories