தமிழ்நாடு

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,896 கோடி.. துறை வாரியாக நிதி ஒதுக்கீடு முழு விவரம் இங்கே..! #TNBudget

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள் இங்கே:

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,896 கோடி.. துறை வாரியாக நிதி ஒதுக்கீடு முழு விவரம் இங்கே..! #TNBudget
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு துறையின் மேம்பாட்டுக்கும் பல்வேறு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள் வருமாறு:

காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு.

பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7400 கோடி ஒதுக்கீடு.

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்காக ரூ.496 கோடி ஒதுக்கீடு.

சுய உதவிக்குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு.

கூட்டுறவுத்துறைக்கு ரூ.13,176 கோடி ஒதுக்கீடு.

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவு மானியமாக ரூ.7500 கோடி ஒதுக்கீடு.

சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி ஒதுக்கீடு.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கீடு.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.293.26 கோடி ஒதுக்கீடு.

மருத்துவத்துறைக்கு ரூ.17901.23 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு.

நகர்ப்புற வளர்ச்சித்துறை ரூ.8737 கோடி ஒதுக்கீடு.

அரசு ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதற்திற்காக ரூ.19,000 கோடி ஒதுக்கீடு.

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.20,400 கோடி ஒதுக்கீடு.

நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடு.

தொன்மையான கோயில்களை சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. இந்து சமய அறநிலையத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.340.87 கோடி ஒதுக்கீடு.

சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.911 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) 13,000 கோடி இழப்பை அரசே ஏற்கிறது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு. டான்ஜெட்கோவுக்கு மின் கட்டண மானியமாக ரூ.9,379 கோடியை அரசு வழங்கும்.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,737 கோடி ஒதுக்கீடு.

துறைமுக சாலை திட்டம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5,770 கோடி ஒதுக்கீடு.

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்துக்கு மானியமாக ரூ.1,520 கோடி ஒதுக்கீடு. இலவச பேருந்து திட்டத்தால் மகளிர் பயணிகளின் பங்கு 40%ல் இருந்து 61% ஆக அதிகரிப்பு.

ஏழை மக்களுக்கான வீடுகளை கட்ட ரூ.2,030 கோடி ஒதுக்கீடு விளிம்பு நிலையில் இருக்கும் இருளர் போன்ற பழங்குடி தமிழர்களுக்கு ரூ.20.7 கோடி மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்ட அரசு அனுமதி.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்படு கிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு.

சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைக்கு ரூ.849 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு.

தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.

பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.

நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.1,906 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு ரூ.4,848 கோடி நிதி ஒதுக்கீடு

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமான அம்ரூத் 2.0 திட்டத்திற்கு ரூ.2,030 கோடி நிதி ஒதுக்கீடு

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2க்கு ரூ.1455 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, 2657 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கும். இம்மதிப்பீடுகளில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு 849.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

banner

Related Stories

Related Stories