தமிழ்நாடு

கொரோனா மரணங்களுக்கு முற்றுப்புள்ளி... 2 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மக்களுக்கு நல்ல செய்தி!

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா மரணங்களுக்கு தமிழ்நாட்டில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா மரணங்களுக்கு முற்றுப்புள்ளி... 2 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மக்களுக்கு நல்ல செய்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளையே ஆட்டம் காணச் செய்துவிட்டது. பல லட்சம் மக்களின் உயிர்களைப் பறித்த கொரோனா தமிழ்நாட்டிலும் 2020 மார்ச் முதல் எண்ணற்ற உயிர்களைக் காவுவாங்கியது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை தளர்த்தப்பட்டுள்ளன.

தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருவது மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 710- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 327 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா மரணங்களுக்கு தமிழ்நாட்டில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories