தமிழ்நாடு

திமிங்கல கழிவுகளை பதுக்கிய கும்பல்.. தப்பிக்க முயன்றபோது நடந்த விபரீதம் : அதிமுக நிர்வாகிக்கு தொடர்பு?

திமிங்கல கழிவுகளை பதுக்கியது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் கவுன்சில் இருக்கும் தொடர்பா என போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமிங்கல கழிவுகளை பதுக்கிய கும்பல்.. தப்பிக்க முயன்றபோது நடந்த விபரீதம் : அதிமுக நிர்வாகிக்கு தொடர்பு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், முருங்கப்பாக்கம் ஹாஸ்பிட்டல் ரோட்டில் ஒருவரது வீட்டில், திமிங்கலத்தின் கழிவுகளை பதுக்கி வைத்திருப்பதாக திண்டிவனம் ஏ.எஸ்.பி., தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் சோதனை செய்த போது, மோகனரங்கன், என்பவரது வீட்டில் திமிங்கலத்தின் கழிவு பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலிஸார் மோகனரங்கனை கைது செய்தனர். மேலும், உடந்தையாக இருந்த ஆலகிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி, செய்யூர் தாலுகா அச்சரப்பாக்கத்தை சேர்ந்த சந்திரசேகர், லட்சுமிபதி, பொளம்பாக்கத்தை சேர்ந்த முருகன் ஆகியோரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு, 3 பேரும் சாப்பிட்டு விட்டு, பால்கனியில் கைகளை கழுவுவதற்கு சென்றுள்ளனர். அப்போது, போலிஸாரிடம் இருந்து தப்பிக்க திடீரென மோகனரங்கன் அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு, இடது கண்புருவம், கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டதால், அவரை ரோஷணை போலிஸார், மீட்டு சிகிச்சைக்காக முண்டிம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக திண்டிவனத்தை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவருக்கும் முக்கிய தொடர்பு இருப்பதாக போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மற்ற நால்வரிடமும், முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் இடமும் போலிஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், திமிங்கல கழிவு பொருட்கள் பதுக்கியது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories