தமிழ்நாடு

“விலங்குகள் பாதுகாப்பில் அக்கறை காட்டும் அரசு..” : வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நிதி ஒதுக்கிய முதல்வர்!

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

“விலங்குகள் பாதுகாப்பில் அக்கறை காட்டும் அரசு..” : வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நிதி ஒதுக்கிய முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ.6 கோடியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்குகளின் உணவு, பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் என மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடியே 28 லட்சம் ஆகிறது.

மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பல மாதங்கள் தொடர்ந்து பூங்கா மூடப்பட்டிருப்பதால் அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசிடம், நிதி ஒதுக்குமாறு முதன்மை வனப்பாதுகாவலர் கோரிய விடுத்திருந்தார்.

இந்நிலையில் உடனுக்குடன் வனவிலங்குகளின் உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ.6 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசின் வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு வனவிலங்கு ஆர்வலர்கள் பெரும் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories