தமிழ்நாடு

பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க அரசின் முதல் அமைச்சரவை பட்டியல் எப்படி இருந்தது தெரியுமா?

பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க அரசின் முதல் அமைச்சரவை பட்டியல் எப்படி இருந்தது தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முதலாக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியமைத்த நாள் (06-03-1967) இன்று.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவிலேயே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த மாநில கட்சி என்ற பெருமையும் பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கே சேரும்.

சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்த காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை, எழுத்தராக தொடங்கிய அவரது வாழ்க்கையை பி.ஏ., எம்.ஏ. என்ற பட்டதாரியாகவும், கல்லூரி ஆசிரியராகவும் , இந்தி திணிப்பை எதிர்த்த போராளி என நீண்டது.

தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கையால் ஈர்க்கப்பட்ட பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நுழைந்து பின்னாளில் அதே சட்டமன்றத்தில் “தமிழ் நிலத்தை தி.மு.க. என்றும் காக்கும்” என்று முழக்கமிட்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் இன்று.

அவரைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் ஒரு பெண் உட்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க அரசின் முதல் அமைச்சரவை பட்டியல் எப்படி இருந்தது தெரியுமா?

அதன்படி, பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.கவின் முதல் அமைச்சரவையின் பட்டியல் இதோ!

பேரறிஞர் அண்ணா - பொது நிர்வாகம், நிதி, திட்டம், மதுவிலக்கு, அகதிகள் நலத்துறை மற்றும் முதலமைச்சர்

கலைஞர் கருணாநிதி - பொதுப்பணிகள், சாலைகள், போக்குவரத்துத்துறை அமைச்சர்

நாவலர்.இரா.நெடுஞ்செழியன் - கல்வி, தொழில், மின்சாரம், சுரங்கங்கள், கனிமம், ஆட்சி மொழி, கைத்தறி, அறநிலையத்துறை அமைச்சர்

கே.ஏ. மதியழகன் - உணவு, வருவாய், வணிக வரித்துறை அமைச்சர்

ஏ.கோவிந்தசாமி - விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் வனத்துறை அமைச்சர்

எஸ்.ஜே.சாதிக் பாட்சா - சுகாதாரத்துறை அமைச்சர்

சத்தியவாணி முத்து - தகவல், செய்தித்துறை அமைச்சர்

எம்.முத்துசாமி - உள்ளாட்சி, காதி, கிராமப்புறத் தொழில்துறை அமைச்சர்

எஸ்.மாதவன் - சட்டம், கூட்டுறவு, வீட்டு வசதித்துறை அமைச்சர்

என்.வி.நடராஜன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

banner

Related Stories

Related Stories