தமிழ்நாடு

”மனநிறைவோடு தேர்வை அணுகுங்கள்; தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்” - பொதுத்தேர்வர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

JEE முதன்மைத் தேர்வுகள் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கேப 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வழங்கப்படும்.

”மனநிறைவோடு தேர்வை அணுகுங்கள்; தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்” - பொதுத்தேர்வர்களுக்கு அமைச்சர் அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மே 5ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்தேர்வு தேதியை வெளியிட்டு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:-

ப்ளஸ் 2 மற்றும் ப்ளஸ் 1 செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி மே 2 ம் தேதி வரை நடைபெறும். மேலும், 10 ம் வகுப்பு செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 6ம் தேதி தொடங்கி மே 30 வரை நடைபெறும் எனவும், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 தொடங்கி மே 28 வரை நடைபெறும் எனவும் +1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 9 தொடங்கி மே 31 முடியும் எனவும் தெரிவித்துள்ளார்..

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு அட்டவணை www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் மகிழ்ச்சியாகவும் மன நிறைவோடு தேர்வுகளை அணுக வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் பேரும், 11ம் வகுப்பு தேவை 8.49 லட்சம் பேரும், 12ம் வகுப்பு தேர்வை 8.36 லட்சம் பேரும் எழுத இருக்கிறார்கள். JEE முதன்மைத் தேர்வுகள் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கேப 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வழங்கப்படும்.

9ம் வகுப்பு முதல் ’நான் முதல்வன்’ எனும் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிகள் ஒவ்வொன்றும் மாணவர்களுக்கான வழிகாட்டு மையங்களாக செயல்படும் என தெரிவித்தார்.

மேலும், பதற்றமில்லாமல் மாணவர்கள் தேர்வுகளை எழுத வேண்டும் எனவும் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் தேர்வு முடிவுகள் பொறுத்தவரையில் ப்ளஸ் 2க்கு ஜூன் 23ம் தேதியும், ப்ளஸ் 1க்கு ஜூலை 7 ம் தேதியும், 10ம் வகுப்புக்கு தேர்வு முடிவுகள் ஜுன் 17 ம் தேதியும் வெளியிடபடும் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories