திருவள்ளூர் நகராட்சியில் ஆயில் மில் பகுதியில் கடைசி நாள் பிரச்சாரம் தீவிரமாக நடை பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது சட்டமன்ற உறுப்பினர் தற்காலிக அலுவலகம் அருகே அனைவரும் தேனீர் அருந்த அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அருகில் இருந்த வீட்டில் 2 இளைஞர்கள் விட்டின் பின்பகுதி கதவை தங்களது கால்களால் எட்டி உதைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது பிரச்சாரத்திலிருந்து வந்த தி.மு.கவினர் அந்த வீட்டருகே சென்று கேட்டதும் உள்ளே ஒரு பெண்மணி குடும்பத்தகராறு காரணமாக உட்பகுதியை பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயல்வதாக தகவல் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு அனைவரும் அங்கு சென்று கதவை உடைக்க முயற்ச்சி செய்தனர். தகவல் அறிந்ததும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அவரை மீட்க சொன்னதும் கிரிகெட் மட்டையைகொண்டு தி.மு.கவினர் அந்த கதவை உடைத்துக் உள்ளே சென்றனர்.
அப்போது மின்விசிறியில் புடவையால் துக்குகில் தொங்கிக்கொண்டிருந்த அப்பெண்னை உயிருடன் மீட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டுவர சொல்லி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உத்தரவிட்டு அப்பெண்ணிற்கு நேரில் சென்று ஆறுதல் தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார். தற்கொலை செய்து கொள்ள இருந்த பெண்னை பிரச்சாரத்தில் இருந்த தி.மு.கவினர் உயிருடன் சென்று மீட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.