தமிழ்நாட்டில் எதிர்வரும் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் இறுதிகட்ட பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்துக்கு சுற்றுலாவுக்காக வந்த இத்தாலியைச் சேர்ந்த ஸ்டெஃபன் என்ற பயணி தி.மு.கவுக்கு வாக்களிக்க கேட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நிகழ்வு காண்போரை ஆச்சர்யத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.
ஏனெனில், கோவையில் அரசு பேருந்தில் பயணித்த போது அந்த சுற்றுலா பயணி பயணச்சீட்டை வாங்கியிருக்கிறார். அவருக்கு அருகில் இருந்த பெண் பயணி டிக்கெட்டுக்கு காசு கொடுக்காமல் பெண்களுக்கான இலவச பயணச் சீட்டை வாங்கியிருக்கிறார்.
மேலும் அந்த ரோமானியர் சென்ற பேருந்தில் இருந்த எந்த பெண்களும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கவில்லை. இதனையடுத்து ஏன் டிக்கெட்டுக்கு காசு கொடுக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அப்போது, தமிழ்நாட்டில் அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணித்துக் கொள்ளும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கொண்டு வந்திருக்கிறது என கூறியிருக்கிறார்கள்.
இதனைக் கேட்டு பூரித்துப்போன அந்த சுற்றுலா பயணி, உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு திட்டத்தை எந்த நாட்டிலும் நான் கண்டதும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை என இத்தாலியர் ஸ்டெஃபன் கூறியிருக்கிறார்.
அதோடு நின்றிடாமல், தானே களத்தில் இறங்கி தி.மு.கவின் கொடியை பிடித்துக்கொண்டு வீதி வீதியாகச் சென்று உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவுக்கு வாக்களிக்கோரி மக்களிடம் பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனையடுத்து, உலகின் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வல்லமை படைத்த ஒரே முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.