நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்.13ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது பா.ஜ.க வெளிநடப்பு செய்த நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
அதனைத்தொடர்ந்து குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், காலம் தாழ்த்தில் மீண்டும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியினார்.
ஆளுநரின் இத்தகைய செயல் கடும் கண்டனம் எழுந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு சட்ட மசோதாவை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்படும் என அறிவித்தார்.
அதன்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அதே தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பும் வகையில், சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் அறிமுகமான காலத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. வசதிபடைத்தவர்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீட் தேர்வை எழுதி வருகின்றனர்!
தன்னிச்சையாக ஆளுநர் சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பி இருப்பது சரியான முடிவல்ல; தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறார்கள்.
குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பாமல், நீதிபதி குழு அறிக்கை பற்றி தனது கருத்தை ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. நீட் விலக்கு மசோதா பற்றிய ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானது.
பொதுமக்களின் கருத்தை கேட்டறிந்து உரிய ஆய்வுக்கு பிறகே நீட் விலக்கு கோரலாம் என நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்தது. ஆனால் ஆளுநரின் கருத்து உயர்மட்டக்குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார்.