தமிழ்நாடு

மீண்டும் ஒரு T23 ? - பட்டப்பகலில் விளைநிலத்தில் உலா; புலியின் நடமாட்டத்தால் பீதியில் ஊட்டி கிராம மக்கள்!

உதகை அருகே காவிலோரை கிராமத்தில் விவசாய நிலத்தில் புலி நடமாடியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கண்காணிப்பு பணி தீவிரம்

மீண்டும் ஒரு T23 ? - பட்டப்பகலில் விளைநிலத்தில் உலா; புலியின் நடமாட்டத்தால் பீதியில் ஊட்டி கிராம மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் வன விலங்குகள் அருகிலுள்ள விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவ்வப்போது உலா வருவது வழக்கம்.

அவ்வாறு உலா வரும் வன விலங்குகள் சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உதகை அருகே உள்ள காவிலோரைக் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நடமாடியது.

மீண்டும் ஒரு T23 ? - பட்டப்பகலில் விளைநிலத்தில் உலா; புலியின் நடமாட்டத்தால் பீதியில் ஊட்டி கிராம மக்கள்!

இதனை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பணியில் ஈடுபட்டிருந்த போது புலியின் நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர். பகல் நேரங்களிலேயே கிராமப்பகுதியில் புலி நடமாடி வருவதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பணிக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் விவசாய நிலத்தில் புலியின் நடமாட்டத்தினை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள காட்சி வைரலாகியுள்ளது. மேலும் புலி நடமாட்டத்தால் காவிலோரை மற்றும் சுற்று வட்டார கிராம மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories