நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி செப்.13ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பட்டது.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க எம்.பி காந்தி செல்வன்தான் 2010ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நீட் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அப்பட்டமான ஒரு பொய்யை சொல்லியுள்ளார்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலையில் கூற்றுப்படி அன்றை தினத்தில் ஒன்றிய அமைச்சராக இருந்தவர் குலாம் நபிஆசாத். மேலும் அந்த தேதியில் நாடாளுமன்ற கூட்டமே நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நீட் மசோதாவை தாக்கல் செய்தவர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில், அதேபோல் காங்கிரஸ் கொண்டு வந்த மசோதாவில் நீட் கட்டாயம் இல்லை விரும்பு மாநிலங்கள் இணையலாம் என்றும் விருப்பம் இல்லாதவர்கள் விலக்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் குஜராத் மற்றும் தமிழ்நாடு விலக்கு பெற்றன. உச்சநீதிமன்ற உத்தவை காட்டி காட்டாயம் நீட் சட்டம் கொண்டு வந்தது பா.ஜ.க.தான். இது கூட தெரியாமல் வாயுக்கு வந்தபடி உலறிக்கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் சாடியுள்ளனர்.
மேலும், அதுவும் சரிதான். உங்களிடம் எப்படி உண்மையை எதிர்ப்பார்க்க முடியும். பொய் என்னும் குட்டையில் ஊறிய மட்டை தானே உங்கள் கட்சி என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.