கடலூர் மாவட்டத்தின் கம்மியம்பேட்டையைச் சேர்ந்தவர் பாரதி இளமாறன். இவரது வீட்டில் உள்ள சமையல் அறையில் விநோதமான ஒலி கேட்டிருக்கிறது.
பாம்பு சத்தமாக இருக்குமோ என எண்ணி பாரதி இளமாறன் பாம்பு பிடிப்பதில் வல்லவரான அதே பகுதியைச் சேர்ந்த செல்வாவை அழைத்திருக்கிறார்.
இதனையடுத்து இளமாறனின் வீட்டு வந்து சோதனையிட்டதில் சமையலறையில் இருந்தது பாம்புதான் என்பதை உறுதிபடுத்தினார் செல்வா. பாத்திரங்களுக்கு இடையே இருந்த பாம்பு அங்கிருந்த குக்கருக்குள் சென்றிருக்கிறது.
குக்கரை பார்த்தபோது அதிலிருந்து நல்ல பாம்பு ஒன்று தலையை தூக்கி காட்டியிருக்கிறது. இதனைக் கண்டதும் இளமாறனின் குடும்பத்தினர் அஞ்சி நடுங்கியிருக்கிறார்கள்.
பின்னர் குக்கரில் இருந்த 4 அடி கொண்ட பாம்பை மீட்ட செல்வா பாதுகாப்பாக காப்புக் காட்டில் விட்டிருக்கிறார். இதனையடுத்து குக்கரில் இருந்து பாம்பு பிடிக்கப்பட்ட நிகழ்வால் கம்மியம்பேட்டை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.