தமிழ்நாடு

தேசிய கட்சிகள் பாடம் கற்க வேண்டும்.. இந்தியாவிலேயே பிரபலமான முதல்வர் மு.க.ஸ்டாலின்: india today புகழாரம்!

இந்தியாவிலேயே பிரபலமான முதலமைச்சராக, மு.க.ஸ்டாலின் திகழ்வதாக, ‘இந்தியா டுடே’ ஆங்கில பத்திரிகை, புகழாரம் சூட்டியுள்ளது.

தேசிய கட்சிகள் பாடம் கற்க வேண்டும்.. இந்தியாவிலேயே பிரபலமான முதல்வர் மு.க.ஸ்டாலின்: india today புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவிலேயே பிரபலமான முதலமைச்சராக, மு.க.ஸ்டாலின் திகழ்வதாக, ‘இந்தியா டுடே’ ஆங்கில பத்திரிகை, புகழாரம் சூட்டியுள்ளது. நாட்டில் உள்ள தேசிய கட்சிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் ‘இந்தியா டுடே’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு :-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக, அ.தி.மு.க. ஆட்சியில் மோசமான நிலையிலிருந்த, தமிழ்நாட்டின் பொருளாதாரம் தற்போது சீரடைந்து வருகிறது.

‘இந்தியா டுடே’ மகுடம் சூட்டியுள்ளது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், ஆட்சி நிர்வாகம், செயல்பாடுகள், புதிய திட்டங்கள் குறித்து ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’, ‘தி இந்து’, ‘பிசினஸ் லைன்’ உள்ளிட்ட பல்வேறு ஆங்கில பத்திரிகைகள் புகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், இதற்கு மகுடம் சூட்டும் வகையில், ‘இந்தியா டுடே’ ஆங்கில பத்திரிகை யும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. இந்தியாவின் பிரபலமான முதலமைச்சர் குறித்து ‘இந்தியா டுடே’ ஆங்கில பத்திரிகை கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில், முதன்முறையாக, முதலமைச்சர் பதவியை அலங்கரித்து கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் 68 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கட்சிகள் பாடம் கற்க வேண்டும்.. இந்தியாவிலேயே பிரபலமான முதல்வர் மு.க.ஸ்டாலின்: india today புகழாரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகழ், தமிழ்நாட்டையும் தாண்டி நாடு முழுவதும் பரவி வருவது இதன்மூலம் தெரியவந்துள்ளதாகவும் ‘இந்தியா டுடே’ தெரிவித்துள்ளது.

கருத்துக் கணிப்பு அடிப்படையில் முடிவு!

தமிழ்நாட்டு மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடமிருந்து தேசிய கட்சிகள், பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு முடிவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பா.ஜ.க. முதலமைச்சர்கள் யாரும் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை!

இந்தக் கருத்துக் கணிப்பில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் யாரும், இந்தப் பட்டியலில் இல்லை என்பதுதான் நிஜம். மேலும், இந்தப் பிரபலமான முதலமைச்சர் கள் பட்டியலில் முதல் ஆறு இடங்களையும், பா.ஜ.க. ஆளாத முதலமைச்சர்களே இடம் பிடித்துள்ளதாகவும், 13 மாநிலங்களில் பா.ஜ.க. முதலமைச்சர்கள் ஆட்சியில் இருந்தாலும், அவர்களில் யாரும் இந்த பட்டியலில், இடம் பிடிக்கவில்லை என்றும் ‘இந்தியா டுடே’ ஆங்கில பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories