தமிழ்நாடு

பேருந்து நிலையத்தில் மகனைத் தொலைத்த பெற்றோர்.. 2 மணி நேரத்தில் மீட்ட போலிஸ்: நடந்தது என்ன?

பேருந்து நிலையத்தில் தொலைத்த மகனை போலிஸார் 2 மணி நேரத்தில் மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பேருந்து நிலையத்தில் மகனைத் தொலைத்த பெற்றோர்.. 2 மணி நேரத்தில் மீட்ட போலிஸ்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம், எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதிக்கு சபரி என்ற மூன்று வயது மகன் உள்ளார். இவர்கள் பொங்கல் பண்டிகைக்காக கோயம்பத்தூரில் இருந்து சொந்த ஊருக்குப் பேருந்தில் சென்றனர்.

அப்போது, அரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டியூர் கிராமத்திற்குச் செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளனர். பிறகு பேருந்து கிராமத்திற்கு வந்த பிறகு அன்புவும், அரவது மனைவி இறங்கியபோது பேருந்தில் மகன் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், அரூர் பேருந்து நிலையத்திலேயே மகனை விட்டுவந்தது அவர்களுக்கு நினைவுக்குவந்தது.

இதற்கிடையில் அரூர் பேருந்து நிலையத்தில் சிறுவன் சபரி பெற்றோரை காணாததால் அழுதுகொண்டிருந்தான்.இது குறித்து அங்கிருந்து போலிஸாரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுவனை மீட்ட போலிஸார் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். பிறகு சிறுவனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு காவல்நிலையம் வரவழைத்தனர்.

பெற்றோர் வந்த பிறகு சிறுவனை போலிஸார் ஒப்படைத்தனர். குழந்தையைத் தொலைத்து 2 மணி நேரத்திலேயே பாதுகாப்பாகப் பெற்றோரிடம் ஒப்படைத்த போலிஸாருக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories