கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். மாத்தூர் அருகே சென்று போது, இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் வினோத்திற்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்க உடனே ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். பிறகு விரைந்து வந்த ஆம்புலன்ஸில் வினோத் குமாரை ஏற்றி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அப்போது விபத்தில் சிக்கிய வினோத்துகமாரிடம் இருந்த பையில் ரூ. 5 லட்சத்து 15 ஆயிரம் பணம் இருந்தை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கண்டுள்ளனர்.
பின்னர் வினோத்குமாரின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்து மருத்துவமனைக்கு வரவைத்தனர். மருத்துவமனைக்கு வந்த அவரின் உறவினர்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரூ. 5 லட்சத்து 15 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை ஒப்படைத்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு வினோத்தின் உறவினர்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டினர். இந்த சம்பவம் அறிந்த பலரும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இந்த சேவை வெகுவாக பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.