திருச்சி மாவட்டம், ஜம்புநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாத குழந்தைக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தை வலி தாங்காமல் துடித்துள்ளது. இதனால் பதட்டமடைந்த குழந்தையின் தாய் வீட்டின் அருகே இருந்து மெடிக்கலில் வயிற்று வலிக்கு மருந்து வாங்கி குழந்தைக்குக் கொடுத்துள்ளார்.
இதைச் சாப்பிட்ட உடன் குழந்தையின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. உடனே அவர் குழந்தையை மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாகக் கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தோர்களைக் கண்கலங்க செய்தது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து சாப்பிட்டதாலே குழந்தை உயிரிழந்ததற்குக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்துகளைத் தானாகவே வாங்கிக் கொடுக்கக்கூடாது என்றும், மருத்துவர்கள் பரிந்துரை ரசீது இல்லாமல் மருந்து கொடுத்தால் சம்மந்தப்பட்ட மெடிக்கல் கடைமீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.