தமிழ்நாடு சட்டப்பேரவையின், இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. தமிழ்நாட்டிற்கு ஆளுநாளராக பொறுப்பேற்று சட்டப்பேரைவையில் அவரின் முதல் உரையாகும்.
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் நடைமுறை ஜூன் மாதத்துக்குள் நிறுத்திவிடும். இன்னும் 3, 4 ஆண்டுகளுக்கு வருவாயை ஈடுகட்டும் வகையில் ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தர வேண்டும்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி டாலராக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் சிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2.29 லட்சம் மனுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
1,74,999 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.66,230 கோடி முதலீட்டுக்கு 109 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதற்கான 2 தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவது எளிதாக்கப்படும். தமிழ்நாட்டில் 5 புதிய தொழிற்பேட்டைகள், சிட்கோ மூலமாக ரூ.241 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்.
இருமொழிக்கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்று ஆளுநர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு புதிதாக ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. 8,600 மின்மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன.
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பேரிடரை தாதுக்க ரூ.541 கோடி செலவிடப்பட்டுள்ளது. புதிய சுற்றுலா கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கத்தொகை, அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.