தமிழ்நாடு

விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்.. ஆவினில் நடந்த ஒட்டுமொத்த ஊழலுக்கும் ராஜேந்திரபாலாஜியே காரணம்!

ஆவினில் நடந்த ஒட்டுமொத்த ஊழலுக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் காரணம். பொறுத்திருங்கள் விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்.. ஆவினில் நடந்த ஒட்டுமொத்த ஊழலுக்கும் ராஜேந்திரபாலாஜியே காரணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தேனியில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்கள் மற்றும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார். முதற்கட்டமாக உழவர் சந்தை அருகே உள்ள ஆவின் விற்பனை நிலையம், பெரியகுளம்சாலை பாலின் தன்மை குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

ஆய்வுகளுக்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். அதனடிப்படையிலே தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றோம். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 83 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் முன்னாள் அமைச்சர்கள் 10பேர் பெயர் உள்ளது.

அதில் எடப்பாடி பழனிச்சாமி பெயரும் உண்டு. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல வழக்குகள் உள்ளது. விசாரணையில் 3 கோடி ரூபாய் ராஜேந்திரபாலாஜி வாங்கியது தெரியவந்துள்ளது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டும். ஆவினில் நடந்த ஒட்டு மொத்த ஊழலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான். விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்” என தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories