தமிழ்நாடு

சிட் ஃபண்ட், FD என பல வகையில் தொடர் மோசடி; IT ரெய்டில் சிக்கிய தேமுதிக பிரமுகர் - ரூ.12 கோடி பறிமுதல்!

தேமுதிக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 12 கோடி பணம் பறிமுதல்

கோப்புப்படம்

Kalaignar TV

கோப்புப்படம்

• Twitter
• Facebook
• WhatsApp
Updated on

கடலூரை சேர்ந்த தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 16 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஜெயபிரியா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கடலூர், பண்ரூட்டி, விருதாச்சலம், நெல்வேலி, சிதம்பரம், திட்டக்குடி, வடலூர், கோயம்புத்தூர், நீலகிரி போன்ற சுமார் 30 இடங்களில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், திருமண மண்டபகங்கள் உள்ளிட்ட தொழில்கள் உள்ளன.

சிட் ஃபண்ட், FD என பல வகையில் தொடர் மோசடி; IT ரெய்டில் சிக்கிய தேமுதிக பிரமுகர் - ரூ.12 கோடி பறிமுதல்!

இந்த இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் சிட் ஃபண்ட் வணிகத்தின் மூலமாக வருமானம் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து ரொக்கமாகப் பெறப்பட்ட வைப்புத் தொகை, ஆன்லைன் மூலமாக ஆவணங்களை பாதுகாக்காமல் கையாடல் செய்தது கண்டுபிடிப்பு. பலரிடம் பணம் பெற்ற ஆவணங்களையும் வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் சுமார் 250 கோடி கணக்கில் வராத அசையா சொத்துகளை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் வராத பணம் 12 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories