தமிழ்நாடு

ஏலச்சீட்டு மோசடியில் சிக்கிய அப்பாவிகள்; ரூ.48 லட்சத்தை ஏப்பம் விட்ட தாய் மகன் சிக்கியது எப்படி?

ஏலச்சீட்டு நடத்தி 48 லட்சம் ரூபாய் மோசடி செய்த குன்றத்தூரைச் சேர்ந்த தாய் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏலச்சீட்டு மோசடியில் சிக்கிய அப்பாவிகள்; ரூ.48 லட்சத்தை ஏப்பம் விட்ட தாய் மகன் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை குன்றத்தூர் புதுநெல்லூர் பகுதியில் வசித்து வருபவர் அலமேலு (32) உள்ளிட்ட 29 பேர் மோகலிங்கம் நகரில் வசித்து வரும் ராபியா (49) என்பவரும் அவரது மகன் சபீர் அக்தர் (26) மற்றும் பக்ருதீன் நடத்தி வந்த உரிமம் இல்லாத மாதாந்திர ஏலச்சீட்டில் சேர்ந்து சீட்டு மற்றும் பண்டு பணம் கட்டியிருக்கிறார்கள்.

சீட்டு முடிந்த பிறகும் ரூ.48 லட்சம் பணத்தைத் திரும்ப கொடுக்காமல் ராபியா, சபீர் மற்றும் பக்ருதீன் ஆகியோர் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட மேற்குறிப்பிட்ட மூவர் மீதும் சட்ட நடவடிக்கை கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளரின் ஆணைப்படி, துணை ஆணையாளரின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் சீட்டு மோசடி மற்றும் கந்துவட்டி தடுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பின்னர் காவல் ஆய்வாளர் கீதா, தலைமை காவலர்கள் கொண்ட தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில் புகார்தாரரின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில் தனிப்படையினரின் தேடுதல் வேட்டையில் மயிலாடுதுறையில் தலைமறைவாக இருந்த ராபியா, சபீர் கைது செய்யப்பட்டனர். பக்ருதீனுக்கு போலிஸார் வலை வீசியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தாய் மகனை நேற்று முன் தினம் (டிச.,17) நீதிமன்றத்தில் ஆஜர் செய்த தனிப்படையினர் நீதிமன்ற ஆணைப்படி சிறையில் அடைத்துள்ளனர்

banner

Related Stories

Related Stories