தமிழ்நாடு

மருத்துவ மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை.. விண்ணப்பிப்பது எப்படி? - தகுதிகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கான 8882 இடங்களுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை..  விண்ணப்பிப்பது எப்படி? - தகுதிகள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் உள்ள 37 (26 பழைய +11 புதிய ) அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் 4,308 இடங்களும், 18 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 2,650 இடங்கள் (அரசு ஒதுக்கீடு - 1,483 இடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு - 1,166) இடங்கள் உள்ளன.

இரண்டு அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் 165 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலும், 18 சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் 1,125 இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீடுட்டில் 635 இடங்கள் உள்ளன. மொத்தமாக 6,957 மருத்துவம் (MBBS) மற்றும் 1,925 பல் மருத்தும் (BDS) படிப்பிற்கும் என சேர்த்த்ய் மொத்தம் 8,882 இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

இந்த இடங்களுக்கான கலந்தாய்வுக்கான அறிவிப்பாணையை செய்திதாள்கள் வழியாக மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதன்படி 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் சமர்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல்(டிசம்பர் 20ஆம் தேதி) ஜனவரி 7ஆம் தேதி மாலை 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனிலேயே விண்ணப்ப கட்டணம், தேவையான சான்றிதழ்கள் அனைத்தையும் அப்லோட் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்து நேரிலோ, தபால் வழியாகவோ ' செயலாளர், தேர்வு கமிட்டி, 162, பெரியார் ஈ.வே.ரா சாலை, கீழ்பாக்கம், சென்னை - 10 என்ற முகவரிக்கு ஜனவரி 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories