தமிழ்நாடு

“தரமற்ற பொருட்கள் விற்றால்..” : விக்கிரவாண்டி அருகே மோட்டல்களில் அதிரடி ஆய்வு - சிக்கிய உணவுப்பொருட்கள்!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள மோட்டல்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதில், காலாவதியான உணவுப் பொருட்கள் சிக்கின.

“தரமற்ற பொருட்கள் விற்றால்..” : விக்கிரவாண்டி அருகே மோட்டல்களில் அதிரடி ஆய்வு - சிக்கிய உணவுப்பொருட்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள மோட்டல்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதில், காலாவதியான உணவுப் பொருட்கள் சிக்கின.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள பஸ்நிறுத்தும் மோட்டல்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது ஹோட்டல் அரிஸ்டோ, ஹோட்டல் ஹில்டா, ஹோட்டல் ஜே ஜே கிளாசிக், ஹோட்டல் அண்ணா, ஹோட்டல் உதயா, ஹோட்டல் ஜே கிளாசிக் ஆகிய மோட்டல்களில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாத உணவு பொருட்கள் சுமார் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், செயற்கை நிறமூட்டிய கார வகைகள் சுமார் 8 கிலோ, நாள்பட்ட இட்லிமாவு மற்றும் பரோட்டா 40 கிலோ, அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

இந்த ஆறு நெடுஞ்சாலை உணவகங்களுக்கும் எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து நெடுஞ்சாலை உணவகங்களிலும் வாட்ஸ் அப் புகார் எண் ஒட்டப்பட்டுள்ளது.

உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் உணவுப் பாதுகாப்புத்துறையின் 94440 42322 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories