தமிழ்நாடு

“ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய திமுக அரசு உறுதுணையாக இருக்கும்” : சட்டத்துறை அமைச்சர் பேச்சு !

ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய திமுக அரசு உறுதுணையாக இருக்கும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“ஜெயலலிதா மரணம் தொடர்பாக  உண்மையை கண்டறிய திமுக அரசு உறுதுணையாக இருக்கும்” : சட்டத்துறை அமைச்சர் பேச்சு !
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவள்ளூர் பட்டறைபெருமந்தூரில் அமைந்துள்ள சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 500க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் அந்தந்த தாய்மொழியில் வழக்காடு மொழியாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு முயற்சி எடுப்பர்.

இந்தியாவிலேயே முதல் முதலாக 1997 ஆம் ஆண்டு சட்ட பல்கலைக்கழகம் கொண்டு வந்து அதற்கு அம்பேத்கர் சட்டக்கல்லூரி பெயர் சூட்டியது கலைஞர். இந்தியாவிலே சூப்பர் முதல்வராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்” எனப் புகழாரம் சூட்டினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 700 கைதிகளை விரைவில் விடுதலை செய்யப்படும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலைக்கு முதல்வர் முயற்சி எடுத்து வெற்றி பெறுவார்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய தி.மு.க அரசு உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories