தமிழ்நாடு

குறைகிறது பாடத்திட்டம்; மாணவர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக பாடத்திட்டம் 35 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கூறியுள்ளார்.

குறைகிறது பாடத்திட்டம்; மாணவர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு மதரஸா-ஐ-ஆசாம் மேல்நிலைப் பள்ளியில், ஒரு லட்சம் சதுரஅடி பரப்பில் அமைக்கப்படவுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று, தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட நிதியால், ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள புதிய பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிய கல்வெட்டை கூட்டாக திறந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் கற்றல் என்னும் மாண்டிசோரி வகுப்பினை தொடங்கி வைத்தனர். இதில் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, மாநிலங்களவை உறுப்பினர்கள் அப்துல்லா, ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர்,

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது...

தமிழகத்தில் உள்ள 2,87,467 வகுப்புறைகளில் குழந்தைகளுக்கு பாலியல் புகார்கள் குறித்த புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098, 14417 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளி கல்வித்துறை சார்பில் வரக்கூடிய கல்வியாண்டில் எல்லா புத்தகங்களிலும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் அளிக்கப்படும்.

தற்போது மாணவர்களின் நோட்டு புத்தகங்களில் இந்த இலவச அழைப்பு எண்கள் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் இடம்பெற செய்யப்படும். அரசு பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை போக்ஸோ சட்டம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு இது தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும், தங்களுடைய பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என எண்ணாமல் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களும் மாணவர்களுக்கும் நம்பிக்கையையும் ஏற்படுத்த கூடிய வகையில் செயல்பட வேண்டும். பள்ளிகள் முழுமையாயாக இயங்க துவங்கிய உடன் இதன் பலன் நமக்கு தெரியவரும்.

இந்த ஆண்டு பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பில்லை. மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை எந்த பயிற்று மொழியில் படித்தார்கள் என்கிற விவரம் இடம்பெறும். மாணவர்களின் கற்றல் குறைபாட்டை சரிசெய்ய , இல்லம் தேடி கல்வி திட்டம் போதுமானதாக இருக்கும் இதுவரை தன்னார்வளர்களை தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது. மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக பாடத்திட்டம் 35 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories