தமிழ்நாடு

பைக்கில் விரட்டிச் சென்று இளைஞரை கொலை செய்த பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கும்பல் - நடந்தது என்ன?

திருவாரூர் மாவட்டத்தில் குமரேசன் என்பவர் கொலை வழக்கில் பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

பைக்கில் விரட்டிச் சென்று இளைஞரை கொலை செய்த பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கும்பல் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவாரூர் மாவட்டம் அகரதிருநல்லூர் காமராஜ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவருக்கு சுதா என்ற மனைவியும் இரணியன் என்ற குழந்தையும் உள்ளனர். சமூக ஆர்வலரான குமரேசன் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தனது உறவினர் பெண் சுசீலா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் குமரேசனின் வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலின்போது குமரேசன் தலையில் அரிவாளால் வெட்டியதில் தலை சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், குமரேசனுடன் வாகனத்தில் சென்ற சுசீலாவிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக இந்த கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது. இதில், முக்கிய குற்றவாளியான பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேரை போலிஸார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த பா.ஜ.க இளைஞரணி ஒன்றிய தலைவர் கலைச்செல்வன் மற்றும் கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார், சுரேஷ், வாஞ்சிநாதன் மற்றும் அகரத்திருநல்லூர் கலைச்செல்வன் ஆகியோர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் இந்த 5 பேரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories