தமிழ்நாடு

”அதிமுக ஆட்சியில் மழை வந்த போது ஜெயக்குமார் ரோட்டுக்கே வந்திருக்க மாட்டார்” - அமைச்சர் கே.என்.நேரு சாடல்!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு இல்லை எனும் கூறும் எடப்பாடிக்கு தமிழக முதல்வர் விசாரணை கமிஷனில் தெரிந்துவிடும் என தெரிவித்தார் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.

”அதிமுக ஆட்சியில் மழை வந்த போது ஜெயக்குமார் ரோட்டுக்கே வந்திருக்க மாட்டார்” - அமைச்சர் கே.என்.நேரு சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ஆர்.கே.நகரில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் காரணமாக சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர், ராஜீவ் காந்தி நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனை ஆய்வு செய்த அமைச்சர் ராட்சத மோட்டார்கள் கொண்டு தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கொருக்குப்பேட்டை அன்னை சத்யா நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் மழைநீரை பார்வையிட்டார்.

இதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் கே என் நேரு, இன்று மாலைக்குள் மழை இல்லாவிட்டால் அனைத்து இடங்களிலும் தண்ணீர் வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேலும் துரிதமாக நடைபெறும் அதற்கான மாநகராட்சி ஊழியர்கள் மண்டல கண்காணிப்பாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் அடுத்த ஆண்டு இதே போன்று மழை பாதிப்பின் போது மறக்காமல் இருப்பதற்காக 166 இடங்களை தேர்வு செய்து இருப்பதாகவும் அதனை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியின் போது சாலையில் தண்ணீர் இல்லை எனக் கூறும் ஜெயக்குமார் மழை வெள்ளத்தின் போது ரோட்டுக்கு வந்து இருக்க மாட்டார் என்று கூறினார்.

அதிமுக ஆட்சியில்தான் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 2015ஆம் ஆண்டுதான் வெள்ளத்தால் சென்னை மூழ்கியது. அப்பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இப்போது தமிழக முதல்வர் மூன்று நாட்களாக மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

வெள்ள பாதிப்பின் போது மக்களுக்கு உணவு வழங்கியது திமுக ஆட்சியின் போதுதான் என்றும் தமிழக முதலமைச்சர் மேயராக இருந்த பொழுதுதான் வெள்ளம் வந்தபோது முதன்முதலில் மக்களுக்கு உணவு வழங்க ஆரம்பித்தார். அவர் காலத்தில்தான் மூன்று பெரிய சமையல் கூடங்கள் கட்டப்பட்டதாக தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு இல்லை எனும் கூறும் எடப்பாடிக்கு தமிழக முதல்வர் விசாரணை கமிஷனில் தெரிந்துவிடும் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories