தமிழ்நாடு

ஆய்வுப் பணியின் போது ஓடிவந்து முதல்வரிடம் ஆசி பெற்ற புதுமண ஜோடி; கொட்டும் மழையில் நெகிழ்ச்சி சம்பவம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டதும் சாலையில் சென்று கொண்டிருந்த புதுமணத் தம்பதி ஓடி வந்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது முதல்வர் அவர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு திருமணப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.

ஆய்வுப் பணியின் போது ஓடிவந்து முதல்வரிடம் ஆசி பெற்ற புதுமண ஜோடி; கொட்டும் மழையில் நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னைப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கண்டதும் சாலையில் சென்று கொண்டிருந்த புதுமணத் தம்பதிகள் ஓடோடி வந்து முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றனர். அப்போது முதல்வர் அவர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு திருமணப் பரிசு வழங்கி வாழ்த்தினார் என்று ட்ரெண்டிங் டார்கெட் (TRENDING TARGET) இணையதள தொலைக்காட்சி சிறப்பு செய்தியில் பாராட்டி வெளியிட்டுள்ளது.

இது குறித்து "TRENDING TARGET" இணையதள தொலைக்காட்சி "நடுரோட்டில் நின்ன முதல்வரை நோக்கி ஓடி வந்த புதுமணத் தம்பதி" என்ற தலைப்பில் ஒளிபரப்பிய சிறப்புச் செய்தி வருமாறு:-

கடந்த 2 நாட்களாகப் பெய்யும் கனமழை காரணமாக சென்னையில் மழை வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.11.2021) காலை சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

அது மட்டுமல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளை முழுவீச்சில் தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் பகுதியில் உள்ள கால்வாயை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார். பின்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவ முகாமுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னை கொடுங்கையூரில் மழை பாதிப்பை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றார்.

அப்போது அங்கே நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்று பார்த்தோமேயானால், முதலமைச்சர் அவர்கள் மழை பாதிப்பை ஆய்வு செய்வதற்காக அவர் வந்த ஜீப்பில் இருந்து கீழே இறங்கியவுடன், அந்த வழியாகச் சென்ற புதுமண ஜோடி திடீர் என முதலமைச்சர் அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்காங்க. சற்றும் இதை எதிர்பார்க்காத தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக அந்த புதுமண ஜோடியை வாழ்த்தி "கல்யாணப் பரிசு" ஒன்றையும் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் இருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சிச் சம்பவமாக அமைந்திருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி - முரசொலி

banner

Related Stories

Related Stories