தமிழ்நாடு

முழு வீச்சில் மீட்பு பணி.. வெள்ளத்தில் சிக்கிய 107 பேர் மீட்பு: தயார் நிலையில் 1000 தீயணைப்பு வீரர்கள்!

வெள்ளத்தில் சீக்கிய 107 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

முழு வீச்சில் மீட்பு பணி.. வெள்ளத்தில் சிக்கிய 107 பேர் மீட்பு: தயார் நிலையில் 1000 தீயணைப்பு வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் இரவுமுதல் சென்னையில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.

இதையடுத்து வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து மழைநீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து நிவாரணப் பணிகள் முழுவீச்சில் முடக்கிவிடப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 507 இடங்களில் மின்மோட்டார்களை கொண்டு வெள்ள நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை தீணையப்பு மற்றும் மீட்புப் பணி துறையினர் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகின்றனர்.

மேலும் தீயணைப்பு வீரர்கள் இதுவரை வெள்ளத்தில் சிக்கிய 107 பேரைப் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களின் தங்கவைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் 1000 தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories