தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்பதால் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என சென்னை மானிலை ஆய்வு மையத் தெரிவித்திருந்தது.
இதையடுத்து நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த புகைப்படங்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.