தமிழ்நாடு

“அவர் பெயர் ஸ்டாலின்..” : முதல்வருக்கு பிரபல ஆராய்ச்சியாளரும் கல்வியாளருமான அசோக் ஸ்வாயின் புகழாரம்!

பிரபல ஆராய்ச்சியாளரும் கல்வியாளருமான அசோக் ஸ்வாயின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.

“அவர் பெயர் ஸ்டாலின்..”  : முதல்வருக்கு பிரபல ஆராய்ச்சியாளரும் கல்வியாளருமான அசோக் ஸ்வாயின் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு சட்டமன்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில், ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்கள் நலன் காக்கும் சட்ட திட்டங்களை இயற்றி, வரலாறு படைப்பதுடன், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் (பதவிப் பிரமாணம் எடுத்தபடி) பல்வேறு கூறுகளையும் - அது வற்புறுத்தும் விழுமியங்களையும் பாதுகாக்கும் வழியிலும் சிறப்பாகச் செயல்பட்டு ஜனநாயகத்தின் மாண்பைப் பெரிதும் காப்பாற்றி வருகிறது.

மாநில உரிமைகள், சமூகநீதி என கடமையாற்றுவதன்மூலம், ‘திராவிட மாடல் ஆட்சி’ எப்படி மானுட உரிமைகளுக்கான மக்களாட்சி என்பதை நாளும் உலகத்திற்குக் காட்டி உயர்ந்துகொண்டே உள்ளது தி.மு.க. அரசு.

இந்நிலையில், நேற்றைய தினம் நரிகுறவர்கள் மற்றும் இருளர் மக்களுக்கு பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செய்துகொடுத்தோடு இல்லாமல், அனைவரும் சமம் என்ற போக்கை அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என கட்டளையிடாமல் தனது செயல் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்த்தியுள்ளார்.

நாட்டின் பூர்வ குடிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்த முதலமைச்சர் அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே சென்று அவர்களுடன் உரையாடியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் முதலமைச்சரின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகிறனர். அந்தவகையில், பிரபல ஆராய்ச்சியாளரும் கல்வியாளருமான அசோக் ஸ்வாயின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அவர் பெயர் ஸ்டாலின். ஒரு தலைவர் என்ன செய்யவேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமி அருகே உள்ள உப்சாலா பல்கலைக்கழகம் ஐரோப்பாவின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இந்த பல்கலைக்கழகத்தில் அமைதி மற்றும் மோதல் ஆராய்ச்சித் துறையின் பேராசிரியராக அசோக் ஸ்வாயின் பணியாற்றி வருகிறார். ஆராய்ச்சியாளரும் கல்வியாளருமான அசோக் ஸ்வாயின் 2017 இல், அவர் சர்வதேச நீர் ஒத்துழைப்புக்கான யுனெஸ்கோ தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories