சென்னை வேளச்சேரி மற்றும் கோயம்பேடு மேம்பாலப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து அவற்றை இன்று மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
முன்னதாக, மேம்பாலங்களை திறப்பதற்காக வேளச்சேரி சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கான்வாய் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்தது. இதையறிந்த முதல்வரின் கான்வாய் வாகனங்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு வழி விட்டு ஒதுங்கின. பின்னர் ஆம்புலன்ஸ் சென்ற பிறகு முதலமைச்சரின் கான்வாய்கள் வேகமாகச் சென்றன.
ஆம்புலன்ஸுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கான்வாய்கள் வழிவிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே சாலையில் கான்வாய்கள் செல்லும்போது பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு வாகனங்களை 12 வாகனங்களில் 6 வாகனங்களாகக் குறைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை அடுத்து தற்போது- 6 கான்வாய் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.