தமிழ்நாடு

2020ம் ஆண்டுக்கான ‘விளக்கு விருது’ : கவிஞர் சுகிர்தராணி, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தேர்வு!

2020 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குக் கவிஞர் சுகதிர்தாரணி, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2020ம் ஆண்டுக்கான ‘விளக்கு விருது’ : கவிஞர் சுகிர்தராணி, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தேர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எழுத்தாளர் புதுமைப்பித்தன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கவாழ் தமிழர்கள் பண்பாட்டு அமைப்பு சார்பில் "விளக்கு விருது" வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2020ம் ஆண்டுக்கான விளக்கு விருது கவிஞர் சுகிர்தராணி, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் சுகிர்தராணி பெண்ணியச் செயற்பாட்டாளராகவும், சமூக ஆர்வலராகவும், தலித் பெண்ணிய செயல்பாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவரின் எழுத்துக்கள் சமூகத்தாலும், ஆண்களாலும் பெண்களுக்காக வரையறுத்து வைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை கேள்வி கேட்கும்.

இவரது 'கைப்பற்றி என் கனவு கோள்', 'இரவு மிருகம்', 'அவளை மொழிபெயர்த்தல்', 'இப்படிக்கு ஏவாள்' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் பெண்களின் உரிமைக் குரலை பிரதிபலிக்கும்.

அதேபோல், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தமிழியல் ஆய்வில் மிகமுக்கியமான பங்களிப்பைச் செய்து வருகிறார். தலித் வரலாறு, தலித் பண்பாடு, தமிழ் ஆய்வுகள், அயோத்திதாசர் ஆய்வுகள், சினிமா திறனாய்வியல் உள்ளிட்ட பல களங்களில் தன்னுடைய ஆய்வுபடைப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவரது நூல்களான 'எதார்த்த பௌத்தம்', 'அயோத்திதாசரும் சிங்காரவேலரும்: நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம்', 'வெளிவராத விவாதங்கள் அயோத்திதாசர்', 'பெயரழிந்த வரலாறு', 'ஆணவக் கொலைகளின் காலம்', 'எழுதாக் கிளவி',' வாழும் பௌத்தம்', 'தமிழ் சினிமா', 'வைத்தியர் அயோத்திதாசர்' உள்ளிட்டவை தமிழ்ச் சமூகத்திற்கு மிகவும் பயனுடையதாகும். 2000த்தில் இருந்து எழுதிவரும், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் மதுரையில் உள்ள கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகபணியாற்றி வருகிறார்.

தமிழ் எழுத்துலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரமிள், சி.சு.செல்லப்பா, பூமணி, ஞானக்கூத்தன், அம்மை, ராஜகௌதம், பாவண்ணன், ஆ.சிவசுப்பிரமணியன், எம்.ஏ,நுஃமான் போன்ற ஆளுமைகளும் விளக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories