தமிழ்நாடு

“உயரதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா?” : பெண் எஸ்.பி பாலியல் தொல்லை விவகாரத்தில் நீதிபதி காட்டம்!

பெண் எஸ்.பிக்கு கூடுதல் டி.ஜி.பி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலிருந்து, தன்னை விடுவிக்கக் கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. கண்ணன் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

“உயரதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா?” : பெண் எஸ்.பி பாலியல் தொல்லை விவகாரத்தில் நீதிபதி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர் தனக்கு பாலியல் சொந்தரவு அளித்தாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் புகார் அளித்தார்.

பெண் எஸ்.பி. சென்னையில் டி.ஜி.பியிடம் புகார் அளிப்பதற்காகத் தனது காரில் சென்றபோது, செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் வழிமறித்து, டி.ஜி.பியிடம் புகார் செய்ய வேண்டாம், இதனால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும் என்று மிரட்டல் தொனியில் கூறியதாகவும் பெண் எஸ்.பி புகார் அளித்தார்.

பெண் எஸ்.பி.யைத் தடுத்து மிரட்டியது தொடர்பாக எஸ்.பி. கண்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பெண் எஸ்.பிக்கு கூடுதல் டி.ஜி.பி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலிருந்து, தன்னை விடுவிக்கக் கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. கண்ணன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெண் எஸ்.பிக்கு கூடுதல் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலிருந்து, தன்னை விடுவிக்கக் கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி கண்ணன் தரப்பில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தலின்படியே தான் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது, நீதிபதி வேல்முருகன் குறுக்கிட்டு, பெண் அதிகாரிகள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்; காவல்துறையிலேயே அவ்வாறு நடத்தப்படாதது அவமானகரமானது எனக் குறிப்பிட்டு, உயரதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.

காவல்துறை உயரதிகாரிகளே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக எஸ்.பி. கண்ணன் த ரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.மேலும் விழுப்புரம் நீதிமன்ற வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories