தேனி மாவட்டம், உப்புகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரசமுத்து மற்றும் திவாகர். இவர்கள் இருவரும் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த யுவாரஜ் என்வரை சந்தித்து தங்களிடம் ஒரு மாயக்கண்ணாடி இருப்பதாகக் கூறியுள்ளனர்.
மேலும், அந்த கண்ணாடியைக் கண்ணில் மாட்டிக்கொண்டு பார்த்தால் எதிரில் இருப்பவர்களை ஆடையின்றி காட்டும் என கூறி யுவராஜ் மனதில் ஆசையை வளர்த்துள்ளனர். இந்த மாயக்கண்ணாடியின் விலை ஒரு லட்சம் ரூபாய் எனவும் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை நம்பி, யுவராஜ் ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்து அந்த கண்ணாடியை வாங்கியுள்ளார். அவர் அணிந்து பார்ப்பதற்குள் உடனே அரசமுத்துவும், திவாகரும் அங்கிருந்து வேகமாகச் தப்பிச் சென்றனர். பிறகு கண்ணாடி போட்டுப்பார்த்தபோது அவர்கள் கூறியதுபோல் எதுவும் நடக்கவில்லை.
அதேபோல் முதியவர்கள் அணியும் கண்ணாடியைக் கொடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த யுவராஜ் அவர்களைப் பின்தொடர்ந்து பிடிக்கச் சென்றார். இதில் அரசுமுத்து மட்டுமே பிடிபட்டார். இவரைக் காவல்நிலையத்தில் யுவராஜ் ஒப்படைத்து நடந்தவற்றைப் புகாராகக் கொடுத்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் அரசமுத்துவை கைது செய்தனர். பின்னர் ஒரு லட்சம் பணத்துடன் தப்பி ஓடிய திவாகரை தேடி வருகின்றனர்.