தமிழ்நாடு

அரசு வேலைக்கு தயாராகிறீர்களா? : தமிழ் மொழித்தாள் தேர்ச்சி கட்டாயம்.. TNPSCயின் புதிய மாற்றங்கள் என்னென்ன?

அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் என TNPSC முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அரசு வேலைக்கு தயாராகிறீர்களா? : தமிழ் மொழித்தாள் தேர்ச்சி கட்டாயம்.. TNPSCயின் புதிய மாற்றங்கள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழகத்தில் அரசுத் துறை, மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டிற்கு 30க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வில் புதிய மாற்றங்களை தற்போது கொண்டுவந்துள்ளது.

அதன்படி, முக்கிய அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான புதிய மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், தமிழ் பாடத்தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்படும்.

இனி நடைபெறவுள்ள அனைத்துத் தேர்வுகளுக்கு முன்பாகவும் தமிழ் மொழித்தாள் தேர்வு நடத்தப்படும்.

நடைமுறையில் இருந்து வரும் One Time Registration ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

பதிவு விண்ணப்பத்தில் புகைப்படம், கையொப்பம் போன்றவை தெளிவாக இல்லை என்றால் அவை நிராகரிக்கப்படும்.

மேலும், பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

banner

Related Stories

Related Stories