தமிழ்நாடு

நிர்மலாஜி பேசுனதெல்லாம் ஞாபகம் இருக்கா? - கதறும் சங்கிகளுக்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்!

மக்கள் துன்பப்படும் போதெல்லாம் அமைச்சருக்குரிய பொறுப்பு ஏதுமின்றி நிர்மலா சீதாராமன் ஆணவமாகப் பேசியபோதெல்லாம் கண்டுகொள்ளாமல், இப்போது பா.ஜ.கவினர் கதறுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

நிர்மலாஜி பேசுனதெல்லாம் ஞாபகம் இருக்கா? - கதறும் சங்கிகளுக்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.கவினர், தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராகப் பரப்பி வரும் அவதூறுகளுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்னாமலை உள்ளிட்டோருக்கு சரமாரி பதிலடி கொடுத்தார் தியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

இதனால், தமிழக நிதி அமைச்சர் திமிராகப் பேசுவதாக பா.ஜ.கவினர் சமூக வலைதளங்களில் கதறி வருகின்றனர். இதற்கு பதிலடியாக தி.மு.க ஆதரவாளர்கள் பலரும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுகளை நினைவுபடுத்தி வருகின்றனர்.

வெங்காய விலை உயர்வால் நாடே கொதித்த நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எதிரொலித்தபோது, ஆணவத்தோடு பேசிய நிர்மலா சீதாராமன், "நான் வெங்காயம், பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்ளாத குடும்பத்திலிருந்துதான் வந்திருக்கிறேன்" என்றார்.

ஹோட்டல்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறித்தும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்தும் அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “வீட்டில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அரசு எந்த வரியும் விதிக்கவில்லையே” என்று ஆணவமாகப் பதில் அளித்தார்.

இவ்வாறு மக்கள் துன்பப்படும் போதெல்லாம் அமைச்சருக்குரிய பொறுப்பு ஏதுமின்றி நிர்மலா சீதாராமன் ஆணவமாகப் பேசியபோதெல்லாம் கண்டுகொள்ளாமல், இப்போது பா.ஜ.கவினர் கதறுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories