தமிழ்நாடு

“பயணம் செய்வதற்கு பணம் ஒரு பிரச்சனையே அல்ல” : சைக்கிளிலேயே லடாக்கிற்கு சென்ற கோவை இளைஞர்!

கோவையைச் சேர்ந்த இளைஞர் சைக்கிளிலேயே லடாக்கிற்கு சென்று அசத்தியுள்ளார்.

“பயணம் செய்வதற்கு பணம் ஒரு பிரச்சனையே அல்ல” :  சைக்கிளிலேயே லடாக்கிற்கு சென்ற கோவை இளைஞர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெரும்பாலான இளைஞர்கள் ஒரு முறையாவது லடாக்கிற்கு சென்று வருவதைத் தங்களது கனவாக கொண்டுள்ளனர். இளைஞர்களுக்கு கோவா சுற்றுலா எப்படி ஒரு கனவோ அதுபோல் லடாக்கும் இவர்களின் கனவுப் பயண வரிசையில் சேர்ந்துவிட்டது.

இயற்கை அழகு கொஞ்சம், பனிப் பிரதேசமான லடாக்கிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இரு சக்கர வாகனம், பேருந்துகள், விமானங்கள் என இளைஞர்கள் சென்று வருகிறார்கள். இதில் இளைஞர்கள் அதிகம் விரும்பும் பயணமாக இருசக்கர வாகனமே உள்ளது. குழுவாகவும், தனியாகவும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் லடாக்கிற்கு சென்று வருகிறார்கள்.

“பயணம் செய்வதற்கு பணம் ஒரு பிரச்சனையே அல்ல” :  சைக்கிளிலேயே லடாக்கிற்கு சென்ற கோவை இளைஞர்!

இந்நிலையில் கோவையைச் சேர்ந்த அஜ்மல் அஜ்ஜு என்ற வாலிபர் சாதாரண சைக்கிளில் லடாக்கிற்கு சென்று அசத்தியுள்ளார். இந்தப் பயணங்களைத் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டும் உள்ளார். அஜ்மல் கடந்த ஜூலையில் சைக்கிளில் தனது வீட்டில் இருந்து பயணத்தைத் துவக்கியுள்ளார். அன்று முதல், லடாக் சென்றது வரை கிட்டத்தட்ட 50 வீடியோக்களுக்கு மேல் backpack tamizha என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் தனது தினசரி பயண அனுவங்களையும், சக லடாக் பயணிகளைச் சந்தித்தது குறித்தும் பேசியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு மாத பயணத்திற்குப் பிறகு செப்டம்பரில் லடாக்கிற்கு சென்று சேர்ந்துள்ளார்.

“பயணம் செய்வதற்கு பணம் ஒரு பிரச்சனையே அல்ல” :  சைக்கிளிலேயே லடாக்கிற்கு சென்ற கோவை இளைஞர்!

இந்த இரண்டு மாதங்களிலும் தினசரி 100 கிலோமீட்டருக்கு மேல் சைக்கிள் மிதித்து, கிடைக்கும் இடங்களில் தங்கி லடாக்கிற்கு சென்று சேர்ந்துள்ளார் அஜ்மல். பயணம் செய்வதற்குப் பணம் ஒரு பிரச்சனை இல்லை என்பதையே அஜ்மல் போன்ற இளைஞர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories