புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவர் மாவட்டங்களில் சில மாதங்களாக தொடர்ந்து வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகள் திருடுபோவதாக போலிஸாருக்கு புகார்கள் குவிந்து வந்தன. இந்த புகார்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து கடந்த வாரம் புதுக்கோட்டை கீரமங்கலம் கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஆடுகளை திருடிச் சென்றபோது பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டனர். அப்போது அவர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலிஸில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில், இருவரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லரசு, ராமநாதன் என தெரியவந்தது. மேலும் அவர்களை எங்களுக்கெல்லாம் தலைவர் ஆடு கடை போடும் ஒருவர்தான் என விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஆடுகளை திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களும் ஆடு கடை போடுபவர் சொன்னதால் திருட வந்ததாக கூறியுன்னர்.
மேலும் ஆடுகளை திருடிவிட்டு விரைந்து கிராமத்தை விட்டு செல்வதற்காக கூகுள் மேப்பை பயன்படுத்துவாகவும் இந்த கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இவர்களை கைது செய்த போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யார் எந்த ஆடு கடை போடுபவர் என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.