திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க மகளிரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உயர்மின் கோபுர விளக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி திருத்தணியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மகளிரணி செயலாளரும் மக்களை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசுகையில், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார். தொகுதி மக்களின் அடிப்படை பணிகளை செய்து செய்து கொள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாய் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தியுள்ளார்.
ஆனால் ஒன்றிய அரசாங்கமோ எம்.பிக்களுக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளது. மேலும் ஒன்றிய அரசு பெண்களின் மாநில உரிமைகளை பறித்து வருகிறது. கலைஞர் ஆட்சியில்தான் கல்வி, சுய உதவிக்குழுக்கள், உள்ளாட்சியில் 33% இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் பா.ஜ.க அரசு இரண்டு முறை ஆட்சியிலிருந்தும் இதுவரை பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகம் பெறுவதற்கான சட்டத்தை நிறைவேற்றவில்லை. பெண்கள் முன்னேற்றத்துக்காக தி.மு.க தவிர வேற எந்த கட்சியும் செயல்படுத்தவில்லை. தற்போது தமிழக முதல்வர், கிராமப்புற பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். இதன் காரணமாக ஆண்கள் வீட்டிலிருந்தபடியே பெண்களை வேலைக்கு அனுப்பி வருகின்றனர்.