தமிழ்நாடு

MBBS சீட்டு வாங்கித் தருவதாக கூறி முன்னாள் இராணுவ வீரர் மோசடி.. கணவரை இழந்த பெண் கண்ணீர் மல்க புகார்!

MBBS படிக்க தனியார் மருத்துவக்கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக ரூபாய் 5 லட்சத்தை ஏமாற்றிய முன்னாள் இராணுவ வீரர் மீது பெண் புகார் அளித்துள்ளார்.

MBBS சீட்டு வாங்கித் தருவதாக கூறி முன்னாள் இராணுவ வீரர் மோசடி.. கணவரை இழந்த பெண் கண்ணீர் மல்க புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அலமேலு (45). கணவரை இழந்த இவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த சரஸ்வதி (18) என்ற மகளும்,பிரபு (16) என்ற மகனும் உள்ளனர்.

அலமேலுவின் மகள் சரஸ்வதி12ம் வகுப்பு, முடித்த நிலையில், அவரை மேற்கொண்டு என்ன படிக்க வைப்பது என்று அலமேலு அவரது உறவினர் விநாயகத்திடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவரது ஆலோசனையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டான் துளசியைச் சேர்ந்த முன்னாள் இராணுவீரர் பத்மநாபன்( 40) பலரை எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு சேர்த்து வருவதாகவும் எனவே அவர் மூலமாக சரஸ்வதியை எம்.பி.பி.எஸ் படிக்க வைக்கும் படி ஆலோசனை கூறியதுடன் பத்மநாபனின் மொபைல் நம்பர் மற்றும் விபரங்களை அலமேலுவிடம் வழங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அலமேலு தொண்டான் துளசி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் பத்மநாபனை அணுகி தனது மகளுக்கு மருத்துவம் படிக்க மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு பத்மநாபன் தனக்கு தெரிந்த ஒருவர் மூலமாக காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் 35 லட்சத்திற்கு மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, முன்பணமாக அலமேலுவிடமிருந்து பத்மநாபன் அவரது மனைவி விஜயா, மகன் பிரபு உள்ளிட்ட குடும்பமே சென்று அலமேலு வீட்டிற்கு சென்று மருத்துவக்கல்லூரியில் சேர்ப்பதாக திட்டமிட்டு ஏமாற்றிபணம் பறித்துள்ளனர்.

பணம் ஐந்து லட்ச ரூபாயை பெற்றுக்கொண்ட பத்மநாபன் குடும்பம், மருத்துவ சீட்டை வாங்கிதராமல் அலமேலுவை 4 ஆண்டுகளாக ஏமாற்றி வந்தனர். அலமேலு இதுகுறித்து பத்மநாபனிடம் தனது மகளின் மருத்துவ படிப்பு காண சீட்டை கேட்டுவந்தார். பின்னர், தன்னை அலைகழித்து ஏமாற்றியதை அறிந்த அலமேலு, பத்மநாபனிடம் தன்னுடைய பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

அதில், பத்மநாபன் பணம் ரூபாய் ஒரு லட்சத்தை மட்டும் தந்துவிட்டு மீதமுள்ள 3 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார் மேலும் அலமேலுவை , பத்மநாபன் தகாத வார்த்தைகளால் பேசியும் அலைக்கழித்தும் வந்துள்ளார். இதனை தொடர்ந்து அலமேலு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யனிடம் புகார் மனு அளித்துள்ளார்.

தன்னை ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மகளுக்கு , மருத்துவப் படிப்பில் சீட்டு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய பணத்தை மீட்டு தரவும் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories