தமிழ்நாடு

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது இன்னும் எத்தனை வழக்குகள் உள்ளது? சொத்துகளின் விவரங்கள் என்ன? - ஐகோர்ட் கேள்வி!

பண மோசடி வழக்கில் கைது செய்யபட்டுள்ள கும்பகோணம் "ஹெலிகாப்டர் பிரதர்ஸ்"-ன் அலுவலக உதவியாளர் அகிலாண்டம் மற்றும் பணியாளர் வெங்கடேசன் ஜாமின் கோரியிருந்தனர்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது இன்னும் எத்தனை வழக்குகள் உள்ளது? சொத்துகளின் விவரங்கள் என்ன? - ஐகோர்ட் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படுவார்கள். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடி கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பண மோசடி வழக்கில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ள அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலக பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது இன்னும் எத்தனை வழக்குகள் உள்ளது? சொத்துகளின் விவரங்கள் என்ன? - ஐகோர்ட் கேள்வி!

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விரைவில் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது என தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் நிதி நிறுவனம் நடத்திய இவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது? இவர்களுக்கு எங்கெல்லாம் சொத்துகள் உள்ளன அதன் முழு விவரங்கள் என்ன.? எத்தனை சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளது?

இவர்களுக்கு குவைத் மற்றும் மலேசியாவில் நிறுவனங்கள் உள்ளதா நிறுவனங்கள் இருந்தால் அதன் முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

banner

Related Stories

Related Stories