தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் 21 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்” : பேரவையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 21 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் 21 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்” : பேரவையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று விவாதத்தின் போது, அ.தி.மு.க உறுப்பினர் தாமோதரன், கிணத்துக்கடவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “கிணத்துக்கடவு சுற்றி 6 அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரி, 52 சுயநிதி அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதனால் அங்குக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தனியாகத் துவங்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

ஏனென்றால், மாநகராட்சியில் ஒரு கல்லூரி திறக்க வேண்டும் என்றால் இரண்டு ஏக்கர் தேவைப்படுகிறது, நகராட்சி என்றால் மூன்று ஏக்கரும் தேவைப்படுகிறது. மேலும் கட்டிடத்திற்கு மட்டும் 12 கோடி ரூபாய் தேவைப்படுகிறது, அது மட்டுமல்ல அதற்கான பணியாளர்களுக்கு ஊதியம் மட்டும் 21/2 கோடி வரை செலவாகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போது இங்கு அமைக்க முடியாது.

இந்த கல்வி ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறை சார்பில் 10 கல்லூரிகளும், கூட்டுறவு மூலம் ஒரு கல்லூரியும், இந்து அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் என 21 புதிய கல்வி கலைக் கல்லூரிகள் அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருங்காலத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் அரசு கலைக் கல்லூரி நிதிகேற்ப அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories