இந்தாண்டு இறுதிக்குள், கோயில்களுக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:
* கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் கிடையாது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
* ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். இதற்காக ரூ.13 கோடி ஒதுக்கப்படும்.
* இந்த ஆண்டு இறுதிக்குள் கோயிலுக்குச் சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்படும்.
* அர்ச்சகர், ஓதுவார் ஆகியோருக்கு பயிற்சி காலத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
* வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
* மருதமலை கோயிலில் லிஃப்ட் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
* சென்னை உட்பட தமிழகத்தில் 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ரூ.150 கோடியில் துவங்கப்படும்.
* தைத் திருநாளில் அர்ச்சகர்களுக்கு புத்தாடை, ஊழியர்களுக்கு புத்தாடை.
* ஸ்ரீபெரும்புதூர் ஆதகேசவ பெருமாள் கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி அமைக்கப்படும்.
* திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூரில் நாள் முழுவதும் அன்னதானம்.
* கோயில் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம். அவர்களுக்க தேவையான பயிற்சி வழங்கப்படும்.
* கோயிலில் நடக்கும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கட்டணம் கிடையாது.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் ரூ.150 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.