தமிழ்நாடு

”பிறந்த வீட்டை விட்டு பிரியும் மணப்பெண் போல்..” - சுப்ரீம் கோர்ட் செல்லும் நீதிபதி சுந்தரேஷ் உருக்கம்!

நீதிபதி சுந்தரேஷ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 56 ஆக குறைகிறது.

”பிறந்த வீட்டை விட்டு பிரியும் மணப்பெண் போல்..” - சுப்ரீம் கோர்ட் செல்லும் நீதிபதி சுந்தரேஷ் உருக்கம்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பிரிவு உபச்சார உரை நிகழ்த்தினார். அப்போது அவர், 24 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும், 12 ஆண்டுகள் நீதிபதியாகவும் நீதிபதி சுந்தரேஷ் பணியாற்றியுள்ளார் எனவும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார் எனவும் புகழாரம் சூட்டினார்.

நீதிபதி சுந்தரேஷ் தனது பதிலுரையில், பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்லும் மணப்பெண்ணைப் போல, பள்ளி படிப்பை முடித்து மேல் படிப்புக்கு செல்லும் மாணவனைப் போல உணர்வதாக குறிப்பிட்டார்.

பிரிவு எப்போதும் சிக்கலானது தான் என்றாலும் வாழ்க்கை முன்னோக்கி செல்ல வேண்டும் எனக் கூறிய அவர், அனைவரையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் எனக் கூறினார்.

இதுவரை லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்திருந்தாலும், மனசாட்சிக்கு எதிராக ஒரு தீர்ப்பும் வழங்கியதில்லை எனக் குறிப்பிட்டார்.

நீதிபதி சுந்தரேஷ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 56 ஆக குறைகிறது. மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75 என்ற நிலையில், 19 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories